ஒரு எலுமிச்சையை தோலுடன் 8 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் இரண்டு டம்ளர் எடுத்து அதில் தலா நான்கு எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும் இரண்டு டம்ளரிலும் தேவையான அளவு சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் இரண்டு டம்ளரிலும் தலா 5 புதினா இலைகளை சேர்க்கவும் ஒரு கரண்டியால் எலுமிச்சை நசுங்கும்படி லேசாக குத்தி விட வேண்டும் இப்போது இந்த டம்ளரில் சோடா சேர்த்து குடிக்கலாம் அவ்வளவு தான் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மொஜிட்டோ தயார்