தர்பூசணியை துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகளை நீக்கி விடவும் இந்த தர்பூசணி துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும் இதனுடன் 5 புதினா இலைகள், கால் ஸ்பூன் மிளகு தூள் சேர்க்க வேண்டும் இதனுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு இரண்டு ஐஸ் ஸ்கியூப்ஸ் சேர்க்கவும் தேவைப்பட்டால் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்து வடிக்கட்டவும் இதில் இரண்டு ஐஸ் ஸ்கியூப்ஸை உடைத்து சேர்த்து பரிமாறலாம் இந்த ஜூஸ் வெயிலுக்கு இதமாக இருப்பதுடன் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்