செய்முறை : ராஜ்மா பீன்ஸை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஊற வைத்த ராஜ்மா பீன்ஸை குக்கரில் போட்டு 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்
அடுத்தது கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், தட்டிய இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும் . அதன்பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
அடுத்தது வேகவைத்த பீன்ஸை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றவும்
அடுத்தது மாங்காய் தூள் சேர்த்து, கடாயை மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்
கடைசியாக சர்க்கரை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான ராஜ்மா தயார்