சுவையான முட்டை மஞ்சூரியன் ரெசிபி !

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள்: சோள மாவு - 2 தேக்கரண்டி, மைதா - 4 தேக்கரண்டி , உப்பு, மிளகு தூள், தண்ணீர், எண்ணெய் , இஞ்சி - 1 நறுக்கியது, பூண்டு - 4 பொடியாக நறுக்கியது

பெரிய வெங்காயம் - நறுக்கியது, குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, வினிகர் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி, கெட்சப் - 4 மேசைக்கரண்டி, வெங்காயத்தாள்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்

அடுத்தது வேகவைத்த முட்டையை நான்கு துண்டாக வெட்டி கொள்ளவும். அதன் பின் கரைத்த மாவில் முட்டையை பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்

அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்

அடுத்தது வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், மிளகுத் தூள் சேர்த்துக் நன்கு கிளறிவிடவும். அதன் பின் அந்த மசாலா கலவையில் பொரித்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்

கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்