சப்பாத்திக்கு ஏற்ற பனீர் க்ரேவி..ரெசிபி இதோ! கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்க்கவும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். துருவிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் பின்பு மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் கடலை மாவு சேர்த்து வதக்கவும். அடுத்து தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும் நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து விடவும்.பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும் கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும்