பாலை திரித்து பனீர் செய்யும் போது எலுமிச்சை சாறுக்கு பதில் தயிரை சேர்த்து பனீர் செய்தால் பனீர் புளிக்காமல் இருக்கும்
பொரியல், குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறினால் காரம் குறைந்து விடும்
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ரசத்தை கொதிக்க விட்டு மிளகு சீரகத்தூள் சேர்த்து அரை மூடி எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் உப்பு குறைந்து விடும்
பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டை தண்ணீரில் நினைத்து மாவோடு சேர்த்து பிசைந்து பூரி செய்தால் மொறு மொறுவென வரும்
வெந்தய கீரை சப்பாத்தி செய்யும் போது சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்
சாம்பாருக்கு துவரம் பருப்பு வேகவைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்
டீயில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்தால் டீ-யின் சுவை கூடுதலாக இருக்கும்
அரிசியில் பூச்சி, புழு வராமல் இருக்க வர மிளகாய் அல்லது பிரியாணி இலை போட்டு வைத்தால் அரிசியில் பூச்சி புழு வராது