கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 16 இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்து செய்தால் இட்லி மிருதுவாக இருக்கும் பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து அரை மணிநேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும் தோசை மாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும் பாயாசத்தில் திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும் அவல் உப்புமா செய்யும்போது பயத்தம் பருப்பை நெத்துப்பதமாக வேகவைத்துச் சேர்த்து கலந்து செய்ய சுவை அதிகமாக இருக்கும் வாணலியில் ஒரு பிடி முருங்கைக் கீரையை நெய் விட்டு வதக்கி, சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் சாம்பாரில் விட்டால் சுவை சூப்பராக இருக்கும் வாழைத்தண்டு கூட்டுப் பொரியல் செய்யும் போது அத்துடன் சிறிது முருங்கைக் கீரையையும் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும் அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவைச் சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்