அன்றாட சமையலை எளிதாக்க டிப்ஸ் இதோ! தயிர் செய்ய, உறை ஊற்றிய பாலில் சிறிது சர்க்கரை சேர்க்கவும் இப்படி செய்தால் தயிர் புளிக்காது அழகாக திறண்டு வரும் இஞ்சி, பச்சை மிளகாய் அரைக்கும் போது மிக்ஸியில் சிறிது உப்பு சேர்க்கவும் இப்படி செய்தால் அவை நன்றாக அரையும் அத்துடன் சுவையாகவும் இருக்கும் பருப்பை குக்கரில் வேக வைக்கும் போது 1 டீஸ்பூன் நெய் சேர்க்கவும் இப்படி செய்தால் விசில் இருக்கும் இடத்தில் தண்ணீர் வழியாது பூரி, சிப்ஸ், அப்பளம், வடை பொரிக்கும் எண்ணெயில் சிறிது உப்பு சேர்க்கவும் இப்படி செய்தால் உணவு எண்ணெயை அவ்வளவு குடிக்காது, அத்துடன் உணவு மொறு மொறுவென இருக்கும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைக்கும் போது கொஞ்சம் எலுமிச்சை தோலையும் சேர்க்கவும் இப்படி செய்தால் அடிப்பிடிக்காது, பாத்திரத்தை கழுவவும் எளிதாக இருக்கும்