ஒரு கப் நறுக்கிய அன்னாசி பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும் இதனுடன் 5 புதினா இலைகள், ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் இதில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் இதை வடிகட்டி இதனுடன் உடைத்த ஐஸ் கட்டி சிறிதளவு சேர்த்து குடிக்கலாம் இதில் புதினா இலைக்கு பதில் ஒரு துண்டு இஞ்சி சேர்க்கலாம் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்து அரைத்தால் இது புத்துணர்ச்சி பானமாக இருக்கும் இந்த அன்னாசி பழ ஜூசின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்