பனீரா? முட்டையா? இதில் எது சிறந்தது?

சைவ உணவான பனீரிலும் அசைவ உணவான முட்டையிலும் புரதம் நிறைந்து காணப்படுகிறது

பனீரில் இருக்கும் கால்சியம் எலும்புகளையும் பற்களையும் வலுவாக்க உதவலாம்

இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் பி12, டி ஆகியவை உள்ளன

பனீரை வைத்து க்ரேவி, டிக்கா, கெபாப், சாண்ட்விச், ப்ரை என வகை வகையாக செய்யலாம்

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்

முட்டை உடல் செயல்பாடுகளுக்கு தேவையான சத்துகளின் மூலமாக இருக்கிறது

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின் பி6, கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன



முட்டையை வேகவைத்து, பொறித்து, ஆம்லேட் செய்து உண்ணலாம்

பனீர், முட்டை ஆகிய இரண்டு உடலுக்கு நல்லதாக இருந்தாலும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்