இரண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும் இதை இரண்டு ஸ்பூன் எண்ணெயில் சேர்த்து வதக்கி கொள்ளவும் கண்ணாடிப்பதம் வந்ததும், இதனுடன் 3 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் கால் கப் பொட்டுக்கடலை சேர்க்கவும் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் 1 ஸ்பூன் எண்ணெயில் சிறிது உளுந்து, நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்தால் சுவையான ஒயிட் சட்னி தயார்