கிரிஸ்பி கிறிஸ்துமஸ் குக்கீஸ்கள் செய்வது எப்படி?

Published by: ABP NADU

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 1 கப்
வெண்ணெய் – 1/2 கப்
முட்டை – 1
பேக்கிங் பவுடர் – 1 கரண்டி
வெண்ணிலா எசன்ஸ்– 1 கரண்டி

ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்ததாக முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

மைதா, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்

எசன்ஸ் உலர்ந்த கலவையும் ஒன்றாக சேர்த்து மிருதுவாக பிசையவும்

கலவையை ஒரு உருண்டையாக பிடித்து உருட்டவும்.

நட்சத்திரம், மரம் போன்ற வடிவங்களில் வெட்டவும்

குத்திய குக்கீஸ்களை அவன்னில் 180°C இல் 15 நிமிடங்கள் வைக்கவும்.

சுடும் குக்கீஸ்களை எடுத்துவிட்டு ஆற விடவும். ஃப்ராஸ்டிங் மற்றும் சர்க்கரை கலைகளை சேர்த்து அலங்கரிக்கவும்

இப்போது குக்கீஸ்களை உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்து மகிழுங்கள்! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்