புலாவிற்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்.. ட்ரை பண்ணி பாருங்க...

Published by: பிரியதர்ஷினி

காளான் நெய் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் : முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி, முழு மிளகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3, பூண்டு - 2 பற்கள்

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, புளி - 3 சிறிய துண்டுகள்.நெய் - 1/2 தேக்கரண்டி, காளான் - 400 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, எலுமிச்சைபழச்சாறு - 1 பழம், தயிர் -1/2 கப் காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, நெய் - 2 மேசைக்கரண்டி, பெரிய வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - 1 மேசைக்கரண்டி

செய்முறை : கடாயில் நெய் ஊற்றி, முழு தனியா, முழு மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்

அடுத்து பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து மேலும் 1 நிமிடம் வறுத்து, ஆறவிடவும்.மசாலா பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்

காளானை ஊறவைக்க, பாத்திரத்தில் சுத்தம் செய்த காளான், எலுமிச்சைபழச்சாறு ,உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், தயிர், அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊறவைக்கவும்

கடாயில் நெய் ஊற்றி, பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்து இதில் மஞ்சள் தூள், ஊறவைத்த காளான் சேர்த்து வதக்கவும்

இதனுடன், வெல்லம் சேர்த்து கிளறவும். இதில் உள்ள ஈரம் போகும் வரை கிண்டினால் காளான் நெய் ரோஸ்ட் தயார்