சுவையான காளான் மசாலா.. ஹோட்டல் டேஸ்ட் தோத்துவிடும்!

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள் : காளான் - 75 கிராம், பெரிய வெங்காயம் -1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா டீஸ்பூன்,எண்ணெய்-2 டீஸ்பூன், பிரியாணி இலை - 1, பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், இலவங்கப்பட்டை கிராம்பு - 2 துண்டு, முந்திரி - 6, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு

முதலில் முந்திரியை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, பின்னர் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்

அடுத்து, கலவையில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, வதக்கவும். அதன் பிறகு கடாயில் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

அடுத்தது, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி விடவும்

அடுத்தது அரைத்த முந்திரி விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு கலந்து விடவும்

அதன் பிறகு நறுக்கிய காளான்களை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான காளான் மசாலா தயார்



புரதம் நிறைந்த காளானை, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்