காரைக்குடி ஸ்டைல் குஷ்கா சாப்பிட்டு இருக்கீங்களா? இப்படி செய்யுங்க சூப்பரா இருக்கும்!

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள்: சீரகசம்பா அரிசி - 1 கப் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு , ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, பிரியாணி இலை, வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 4 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தக்காளி - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, புதினா இலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் - 2 கப்

செய்முறை : ஒரு குக்கரில் கொஞ்சம் எண்ணெய் , நெய் ஊற்றி, பட்டை கிராம்பு,, ஏலக்காய், அன்னாசிப்பூ மராத்தி மொக்கு , ஜாவித்ரி, கல்பாசி, பிரியாணி இலை, சேர்த்து வதக்கவும்.அடுத்தது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பச்சை மணம் நீங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , உப்பு சேர்த்து கிளறிவிடவும்

அடுத்தது புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு சீராக சம்பா அரிசியை ஊறவைக்கவும்

அடுத்தது, சீரக சம்பா அரிசியை குக்கரில் சேர்க்கவும் . ஒரு கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். அடுத்தது ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்

அதன் பிறகு குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான காரைக்குடி ஸ்டைல் குஷ்கா தயார்