கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 7

Published by: பிரியதர்ஷினி

நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்

வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது

இட்லி மாவு சீக்கரம் புளித்துவிடும். அதை தடுக்க மாவு அரைக்கும் போது சில ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்து எடுத்தால் புளிப்பு இல்லாமல் இருக்கும்

சப்பாத்தி மாவு மீதமானால் ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்பு மாவின் மீது எண்ணெய் தடிவி காற்று புகாதவாறு வைத்தால் கலர் மாறாமல் அப்படியே இருக்கும்

மட்டன் சீக்கிரமாக வேக, மட்டனை சின்ன துண்டுகளாக வெட்டி வாங்கி கொள்ளவும், அதோடு சமைக்கும் பாத்திரத்தில் சிறு துண்டு பப்பாளி சேர்த்தால் சீக்கிரமாக வெந்துவிடும்

எலுமிச்சை சாதம் சுவையாக இருக்க, இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து வதக்கி சாப்பாட்டில் கலந்தால் பிரமாதமாக இருக்கும்

ரவா தோசை முறுகலாக வருவதற்கு, ரவையுடன், ஒரு பங்கு கோதுமை, இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து தோசை சுட்டால் முறுகலாக வரும்

டீ சுவையாகவும் மணமாகவும் இருப்பதற்கு, டீ யில் சிறிதளவு பெருங்சீரகத்தை சேர்க்க வேண்டும்