ஒரு மிக்ஸி ஜாரில் 2 மேசைக் கரண்டி தயிர் சேர்க்கவும் அதனுடன் நறுக்கிய 1 துண்டு இஞ்சி, நறுக்கிய 1 பச்சை மிளகாய் சேர்க்கவும் சிறிது நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சிறிது உப்பு சேர்க்கவும் இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும் இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் அவ்வளவுதான் சுவையான மசாலா மோர் தயார்