நாவில் பட்டால் கரையும் மதுரை பால் பன் ரெசிபி இதோ! தேவையான பொருட்கள் : மைதா - 1 கப் (250 மி.லி கப்), பொடித்த சர்க்கரை - 3/4 கப், சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி பால் - 2 மேசைக்கரண்டி, தயிர் - 1/4 கப், நெய் - 1 மேசைக்கரண்டி, தண்ணீர் , சர்க்கரை - 1/2 கப், எண்ணெய் செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா, அரைத்த சர்க்கரை சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும் அடுத்தது பால், தயிர், நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதன்பின் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் வைக்கவும் அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகாக தயார் செய்து கொள்ளவும் அடுத்தது மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் பொரித்து எடுத்த பால் பன்னை ஆறவைத்து சர்க்கரை பாகில் சேர்த்து கலந்து விட்டு உடனே எடுத்தால் அருமையான மதுரை பால் பன் தயார்