உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை கடையல்!

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள் : வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை ஒரு கட்டு பாசிப் பருப்பு - 50 கிராம் , சின்ன வெங்காயம் - 75 கிராம் , பச்சை மிளகாய் - 4 பூண்டு - 7 பல் , தக்காளி -1 , மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2 , கசகசா - 2 டேபிள் ஸ்பூன், கரம்மசாலா - 1 டீஸ்பூன் , தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர் , கடுகு - 1/2 டீஸ்பூன் , நல்லெண்ணெய் - தாளிக்க , உப்பு - தேவையான அளவு , கறிவேப்பிலை - 1 கொத்து

கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும் , குக்கரில் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும்



அதில் கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் மற் றும் தக்காளி சேர்த்து முக்கால் லிட்டர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்

பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மத்து வைத்து நன்கு கடையவும்

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கசகசாவை தேங்காய்ப்பால் விட்டு அரைத்து ஊற்றவும். பின் கரம் மசாலா சேர்க்கவும்

ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதித்ததும், தாளிக்கும் கரண்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து கொட்டி அடுப்பை அணைத்து கறிவேப்பிலையை தூவவும்

அவ்வளவுதான் ஆரோக்கியமான வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை கடையல் தயார்