ருசியான அவல் உப்புமா செய்வது எப்படி? தேவையான பொருட்கள் : கைக்குத்தல் அவல் - 500 கிராம், வெங்காயம் - 100 கிராம், பச்சை (அல்லது) காய்ந்த மிளகாய் - 10, கடுகு -1/2 தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு-2 மேசைக் கரண்டி கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு-1 தேக்கரண்டி, தண்ணீர்-1 லிட்டர், எண்ணெய்-100 மி .லி, துருவிய தேங்காய்-1/2 மூடி வெங்காயத்தையும், மிளகாயையும் சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள் எண்ணெய் சூடானதும், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கடுகையும், ஊறவைத்த பருப்புகளையும் ஒவ்வொன்றாக போட்டு லேசாக வறுக்க வேண்டும் பின்னர் அடுப்பை பற்றவைத்து வாணலியை வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றவும் உளுந்தம்பருப்பையும், கடலைப்பருப்பையும் சிறிது நேரம் ஊறவையுங்கள் தண்ணீரில் உப்பைக் கலந்து, அந்த நீரில் அவலை 5 நிமிடம் ஊறவைத்திடுங்கள் பிறகு, ஊறவைத்த அவலில் உள்ள நீரை வடிகட்டி, அவலை வாணலியில் இட்டு நன்றாக கிளறுங்கள் பின் 10 நிமிடத்தில் தேங்காய் துருவலை கலந்து, இறக்கிவைக்கவும் இப்போது சூடான, சத்தான அவல் உப்புமாவை ருசிக்கலாம்