ஊட்டச்சத்து நிறைந்த சுவையான ஆடி கும்மாயம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு 4 டம்ளர், பச்சரிசி 4 டம்ளர், கருப்பட்டி ½கிலோ, தண்ணீர் 6 டம்ளர், நெய் சிறிதளவு கடாயில் உளுந்தம்பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து மிக்சியில் அரைக்கவும் பின்னர் மாவை சலித்து, கடாயில் இட்டு வறுக்க வேண்டும் மற்றொரு அடுப்பில் கருப்பட்டியையும், தண்ணீரையும் சேர்த்து மிதமான சூட்டில் உருக வைக்கவும் மாவு கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, நெய்யை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் பின்னர், வறுத்த மாவுடன் நீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கலக்கவும் பிறகு கடாயில் கருப்பட்டி நீரை விட்டு, அதில் இந்த மாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பின்னர் இறக்கி, தட்டில் கொட்டி ஆற விடவும். அவ்வளவுதான் ஆடி கும்மாயம் ரெடி