கமகமக்கும் காராமணிக்காய் பொரியல் செய்வது எப்படி? தேவையான பொருட்கள் : காராமணிக்காய் - 400 கிராம் , சாம்பார் வெங்காயம் - 200 கிராம் , கடுகு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி , சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி , கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி , தேங்காய் எண்ணெய் -தேவைக்கேற்ப , உப்பு - தேவைக்கேற்ப காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத் தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும் பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும் பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும் இப்பொழுது சுவையான காராமணிக்காய் பொரியல் தயார், இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்