ருசியான எள்ளு சாதம்.. மதிய வேளைக்கு செய்து பாருங்க!

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள் : எண்ணெய் - 3 தேக்கரண்டி , கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி , வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு

கடுகு - 1/2 தேக்கரண்டி, காய்ந்தமிளகாய் - 2 , கறிவேப்பிலை, வடித்த சாதம் , எள்ளு - 3 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி , நெய் - 1 தேக்கரண்டி, தேங்காய் அரை மூடி

செய்முறை : கடாயில் எண்ணெய் இல்லாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன் பின் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்

அடுத்தது மிளகு, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதில் துருவிய தேங்காவை சேர்த்து வதக்கவும்.பின்பு எள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

அதன்பின் கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை விட்டு இறக்கவும். நன்கு ஆறவிட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். அதன் பின் கடுகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்

அந்த கலவையோடு வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்துவிடவும்

பின்பு அரைத்து வைத்த எள்ளு பொடி சேர்த்து கலந்து கடைசியாக நெய் சேர்த்து இறக்கினால் சுவையான எள்ளு பொடி சாதம் தயார்