கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 3 ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும் வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு வெள்ளை சர்க்கரை சேர்த்தால், அது சீக்கிரமாக வதங்கிவிடும் காய்கறி பொறியல் செய்யும் போது எண்ணெய் அதிகமாகிவிட்டால் சிறிதளவு கொள்ளு மாவை தூவி வதக்கினால் எண்ணெய் உறிஞ்சப்படும் தக்காளி சட்னி அரைக்கும் போது சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும் சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு பால், எண்ணெய் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும் முட்டை வேக வைக்கும் தண்ணீரில் கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சிறிதளவு சேர்த்து முட்டையை வேகவைத்தால் ஓடு எளிதாக வந்துவிடும் பூரி, எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்கு, பூரி பொரிக்கும் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கல் உப்பை சேர்க்க வேண்டும்