சென்னை உணவை விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய 9 சிறப்பான உணவுகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pinterest/nish18

கொத்து பரோட்டா:

கொத்து பரோட்டா ஒரு இதமான மற்றும் சுவையான உணவு. சூடான இரும்பு தவாவில் முட்டை, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சால்னா ஆகியவற்றுடன் பரோட்டா சேர்த்து வதக்கி சுட சுட தட்டில் பரிமாறப்படும்

Image Source: Pinterest/chitrasendhil

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா மதுரையில் இருந்து வந்த ஒரு சுவையான மற்றும் குளிர்ச்சியான பானம். பால், பாதாம் பிசின், சர்சாபரில்லா சிரப், கோயா மற்றும் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் ஆகியவற்றிலிருந்து கலவையாக தயாரிக்கப்படுகிறது

Image Source: Pinterest/mharini

அத்தோ

வட சென்னையின் பரபரப்பான தெருக்களில் அத்தோ மிகவும் பிரபலம். இந்த நூடுல்ஸ் சாலட்டில் துருவிய முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, எண்ணெய், மிளகாய், புளி சாறு என பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

Image Source: Pinterest/hungryforever

இறால் வறுவல்

இறால் வறுவல் என்பது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிடித்தமான ஒரு காரசாரமான மற்றும் நறுமணமிக்க உணவாகும். இதில் ஊறவைத்த இறால் சேர்த்து, மிருதுவான தோற்றத்திற்காக வறுக்கப்படுகிறது.

Image Source: Pinterest/faskitchen

பஜ்ஜி

பஜ்ஜி சென்னை உணவுப் பாரம்பரியத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் அல்லது மிளகாய் போன்ற பல்வேறு பொருட்களை மசாலா கலந்த கடலை மாவு கரைசலில் தோய்த்து இந்த சிற்றுண்டி செய்யப்படுகிறது

Image Source: Pinterest/jeevikitchen

பால் கோவா

பால் கோவா ஒரு பால் சார்ந்த இனிப்பு மற்றும் நீண்ட நேரம் சமைக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு ஆகும். இது ஒரு பஞ்சுபோன்ற நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது.

Image Source: Pinterest/sharmispassions

திண்டுக்கல் பிரியாணி

திண்டுக்கல் பிரியாணியில் சீரக சம்பா அரிசியும், உள்ளூர் மசாலாப் பொருட்களுடன் கூடிய மிளகு மசாலாவும் உள்ளது. தயிர் மற்றும் எலுமிச்சையால் ஊறவைக்கப்பட்ட மென்மையான இறைச்சி, அதற்கு ஒரு தனித்துவமான புளிப்பு சுவையை அளிக்கிறது.

Image Source: Pinterest/bheemboyskitchen

புட்டு

பஅரிசி மாவை அரைத்து தேங்காய் துருவலுடன் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு வகை புட்டு. இந்த ஆவியில் வேகவைத்த உணவு கடலை கறி மற்றும் வாழைப்பழத்துடன் சேர்த்து உண்ணப்படுகிறது.

Image Source: Pinterest/happpyhomeee

சுண்டல்

தென்னிந்திய சிற்றுண்டியான சுண்டல், கொண்டைக்கடலை, பச்சை பயறு அல்லது வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளால் செய்யப்படுகிறது. இது இலகுவானது, சத்தானது மற்றும் வயிறு நிரப்பும் தன்மை கொண்டது.

Image Source: Pinterest/dassanasvegrecipes