ஒரு கப் ஓட்ஸ், அரை கப் ரவையை தனித்தனியே வறுத்துக் கொள்க ஓட்ஸை கொரகொரப்பாக அரைத்துக் கொள்க ரவையுடன் அரை கப் புளித்த தயிர், அரைத்த ஓட்ஸ் சேர்த்து கலக்கவும் 1 1/2 கப் நீர் சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும் கடலைப்பருப்பு, உளுந்து, நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும் முந்திரி, தேங்காயும் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்துக் கொள்ளவும் உப்பு, ஆப்ப சோடா நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும் வழக்கம் போல் இட்லி தட்டில் ஊற்றி அவிக்கவும் அவ்வளவுதான் சுவையான சாஃப்டான ஓட்ஸ் இட்லி தயார்