ஒரு கப் முழு பாசி பருப்பை வறுத்து ஆற வைக்கவும் பாசி பருப்புடன் தலா 8 முந்திரி, பாதாம் சேர்த்து நைசாக அரைக்கவும் இந்த மாவை 3 டீஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும் ஒரு கப் பொடித்த வெல்லத்தில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து உருக்கவும் இதை வடிகட்டி முக்கால் பாகம் கரைசலை மாவில் சேர்க்கவும் இதை லட்டு பிடிக்கும் பதத்திற்கு கரண்டியால் பிசையவும் மீதமுள்ள வெல்லக் கரைசலையும் சேர்த்து பிசையவும் அவ்வளவுதான் இதில் லட்டு பிடித்துக்கொள்ளலாம்