செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் சேர்த்து வதக்கவும்
அதன் பிறகு உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் ஃப்ளேக்ஸ், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
அடுத்தது அரைத்த தக்காளி, வேகவைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம், வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவிடவும்
கடைசியாக துளசி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சிக்கன் பாஸ்தா தயார்