புளிச்ச மாவிலும் சுவையான இட்லி, தோசை செய்வது எப்படி? இட்லி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும் பெரும்பாலான வீடுகளில் காலை இரவு உணவாக இட்லிதான் இருக்கும் இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார், இட்லி பொடி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் சில சமயங்களில் இட்லி மாவு புளித்து விடுவதால் மாவில் இட்லி செய்தாலும் சுவையாக இருக்காது சிம்பிளான டிப்ஸை பின்பற்றினால் புளித்த மாவை சுவையாக மாற்றலாம்.. இட்லி தோசை மாவு புளித்திருந்தால் அதில் சிறிதளவு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்க்கலாம் பச்சை மிளகாய் விழுது சேர்க்கலாம் இல்லையெனில் அவற்றை நறுக்கயும் போடலாம் இட்லி, தோசை மாவு ரொம்ப புளித்திருந்தால் நீங்கள் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம். அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடக்கூடாது நீங்கள் மாவு அரைக்கும் போது அதில் சாதாரண நீருக்கு பதிலாக குளிர்ந்து நீர் பயன்படுத்தினால், இட்லி மாவு சீக்கிரம் கெடாமல் இருக்கும்