கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 18

Published by: பிரியதர்ஷினி

தோசை மாவில் 1 டீஸ்பூன் ரவை சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும்போது சிவந்து மொறு மொறுவென வரும்

ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை நெய்யில் லேசாக வறுத்து சாம்பார் இறக்கும் போது சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்

அவலை வறுத்து பொடியாக அரைத்து தோசை மாவில் சேர்த்து தோசை சூட்டால் பஞ்சி போல வரும்

பொங்கல் செய்யும் போது பச்சரிசியை லேசாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து பொங்கல் செய்தால் குழையாமல் வரும்

தோசைக்கு மாவு அரைக்கும் போது துவரம் பருப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவு அரைத்தால் தோசை முறுகலாக வரும்

இடியாப்பம் செய்யும் போது முக்கால் பங்கு தண்ணீர், கால் பங்கு பால் சேர்த்து மாவு பிசைந்தால் இடியாப்பம் பஞ்சி போல வரும்

சட்னி அரைக்கும் போது வரமிளகாயோடு சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்

இட்லி பூப்போன்று மென்மையாக வருவதற்கு மாவில் இரண்டு கைப்பிடி சாதத்தை கலந்து அரைத்தால் போதும்

தயிர்ப் பச்சடி நீர்த்துப் போய்விட்டால் அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்துப் பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும்