பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கொத்தமல்லி இலை , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி , சீரக தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய்
செய்முறை : கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் . கடலை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் வேகவைக்கவும்
அதன்பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கடலை பருப்புடன், ஓட்ஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், உப்பு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
பிசைந்து மாவை உருண்டை பிடித்து கொள்ளவும். அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இந்த கலவையை உள்ளங்கையில் எண்ணெய் தடவி, கடாயில் தட்டி போட்டு எடுக்கவும்.
வடை நன்கு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிடலாம்
இந்த எளிய ஓட்ஸ் வடையை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்கலாம்