ஆவியில் செய்யப்படும் உணவுகள் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது



பாரம்பரிய ஆசிய காலை உணவுகளில் இடியாப்பமும் ஒன்று



இடியாப்பம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது



பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேல் ஊறவைக்க வேண்டும்



பருத்தி துணியில் அரிசியை போட்டு காற்றில் உலர வைக்க வேண்டும்



லேசான ஈரப்பதம் இருக்கும் போதே நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்



சல்லடையில் அந்த மாவை கொட்டி நைசாக சலித்து கொள்ள வேண்டும்



இந்த இடியாப்ப மாவில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி பிசைய வேண்டும்



இட்லி தட்டில் இடியாப்ப மாவை முறுக்கு பிழியும் உபகரணத்தில் பிழிந்து ஆவி கட்ட வேண்டும்



15 - 20 நிமிடங்கள் வரை அவித்து எடுத்தால் சுவையான இடியாப்பம் தயார்