சட்னி- சாம்பாருக்கு மாற்றாக இருக்கும் வேர்க்கடலை சட்னி பற்றி காணலாம்



வேர்க்கடலையில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் அதிகளவில் உள்ளது



இதனை தயார் செய்ய 10 நிமிடங்கள் போதுமானது



தேவையான பொருட்கள்: வேர்க்கடலை (100 கி), தேங்காய், மிளகாய், புளி,உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை



வேர்க்கடலையை கருகாமல் வறுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்



அதில் தேங்காய், மிளகாய், புளி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்



அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்



வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்



இதனை வேர்க்கடலை சட்னியில் சேர்த்தால் அவ்வளவு தான் சுவையானதாக இருக்கும்



இதனை தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிடும் போது சுவை வேற லெவலில் இருக்கும்