வெயில் காலம் தொடங்க இருக்கும் நிலையில் கரும்பு சாறு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்து உள்ளது மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்தாக கரும்பு சாறு செயல்படும் என கூறப்படுகிறது கரும்பு சாறு சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுக்க உதவலாம் முகப்பரு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவலாம் கரும்பு சாறு மலச்சிக்கலை நீக்கி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் அதிகப்படியான சர்க்கரை இருக்கும் காரணத்தால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் பாலிகோசனால் என்ற வேதி பொருள் இருப்பதால் தூக்கமின்மை ஏற்படும் என கூறப்படுகிறது கரும்பு சாறு ரெடியான 20 நிமிடங்களுக்குள் அதை அருந்த வேண்டும் இல்லையெனில் உடல் உபாதைகள் ஏற்படலாம் ஒரு கப் கரும்பு சாறில் 100 கிராம் அளவு சர்க்கரை உள்ளதால் அளவாக குடிக்க வேண்டும்