பச்சைப் பயிறை வாரம் ஒருமுறை உட்கொண்டால் எண்ணற்ற நன்மைகள் பெறலாம்



இதில் நிறைய கலோரிகள் காணப்படுகிறது



அதில் துவையல் செய்வது எப்படி என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் -
அரை கப் பச்சைப்பயறு, பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, எண்ணெய், உப்பு (தேவையான அளவு)



வாணலியில் பச்சை பயறை நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்



பூண்டு, தோல் நீக்கப்பட்ட இஞ்சி, தேங்காய், மிளகாய், ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுக்கவும்



இது ஆறிய பின் பயறு, புளி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்



அவ்வளவு தான் சுவையான பச்சைப்பயறு துவையல் ரெடி



இதனை வெறும் சோற்றில் கலந்து கூட சாப்பிடலாம்.



சாப்பிடும்போது சிறிது நல்லெண்ணெய் கலந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.