நன்றாக ஊற வைத்த பாசிப்பருப்பை, சிறிதளவு சொரசொரப்பாக அரைத்து, சூடான நெய்யில் சிறிதுநேரம் கிளறிவிட்டால் தயாராகிவிடும்
நெய்யில் கோதுமை மாவை பொன்னிறமாக வரும்வரை வருத்து பின்னர் சர்க்கரை தண்ணீரும் சேர்த்துக் கிளறினால் 10 நிமிடத்தில் தாயாராகிவிடும்
ஊறவைத்த வால்நட்டையும் வெள்ளரிக்காய் விதைகளையும் நன்றாக அரைத்து வறுத்துக்கொள்ளவும். பின்னர் பால், கற்கண்டு தூள், ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து சமைக்கவும்
துருவி வைத்த பூசணிக்காயை பாலில் வேகவைத்து தேன் அல்லது வெல்லம் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை கிளறினால் அல்வா தயார்
சூடான நெய்யில் ரவை சேர்த்து பொன்னிறமாக வருத்தபின் வெல்லம் கலந்த தண்ணீருடன் ஏலக்காய் சேர்த்து கிளறினால் வெல்லம் புட்டு தயார்
பேஸ்ட் போல அரைத்த பேரிச்சம்பழத்தை நெய்யில் வழுவழுப்பாக வரும்வரை சமைத்து அதில் முந்திரி, பாதாம், வால்நட் சேர்த்துக்கொண்டால் சூடான பேரிச்சை அல்வா தயார்
துருவிய கேரட்டை பாலில் சேர்த்து நன்றாக குழையும் வரை வேகவைத்து, அதன்பின் சர்க்கரையும் நெய்யும் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை கிளறவேண்டும்
ஊறவைத்த பாதாமை பேஸ்ட் போல அரைத்து அதை நெய், பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறினால் பாதாம் அல்வா தயார்
ராகி மாவு, பால், நெய், சர்க்கரை கொண்டு செய்யும் ராகி அல்வா கால்சியம் சத்து நிறைந்தது