கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 17

Published by: பிரியதர்ஷினி

சாம்பார் செய்யும் போது அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால் சாம்பாரின் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும்

இட்லி பூப்போன்று மென்மையாக வருவதற்கு மாவில் இரண்டு கைப்பிடி சாதத்தை கலந்து அரைத்தால் போதும்

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தக்காளிப் பழத்தையோ அல்லது உருளைக்கிழங்கையோ வெட்டிப்போட்டு கொதிக்க விட்டால் உப்பு குறைந்து விடும்

தோசை மாவில் 1 டீஸ்பூன் ரவை சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும்போது சிவந்து மொறு மொறுவென வரும்

உளுந்து வடை செய்யும்போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித் தழையை சேர்த்து ஆட்டி செய்தால் நறுக்கிப் போட்டு செய்வதைவிட வாசனையாக இருக்கும்

துவரம் பருப்புக்குப் பதிலாகப் பொட்டுக் கடலையுடன் வர மிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்

தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தைப் பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும்

உருளைக்கிழங்கு வேக வைக்கும்போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்