உடலுக்கு ஆற்றல் தரும் கொள்ளுப் பொடி ரெசிபி!
கொள்ளு - 1 கப், உளுத்தம்பருப்பு - 1/2 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், பூண்டு -4-5, கருவேப்பிலை -1 கப், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 10-15
கடாயில் கொள்ளும், உளுந்து, கடைப்பருப்பு மூன்றையும் தனித் தனியே வறுத்து எடுக்கவும்.
காய்நத மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து தனியே வைக்கவும்.
வறுத்த எல்லா பொருட்களை நன்றாக ஆறிய பின், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
இதை காற்று புகாதா கண்ணாடி டப்பாவில் சேர்த்து வைக்கவும்.
கொள்ளு ஊட்டச்சத்து நிறைந்தது. வாரத்தில் ஒரு நாள் கொள்ளு சாப்பிடுவது எலும்புகள் வலுப்பெற உதவும்.
கொள்ளு பொடி இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.