சமைப்பதற்கு முன் பருப்பை ஏன் ஊற வைக்க வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும்

பருப்பில் காணப்படும் டானின்கள், பாலிபினால்கள் - ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கலாம். இந்நிலையில், இந்த பருப்பை ஊற வைக்க, டானின்கள், பாலிபினால்கள் அளவை குறைத்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும்

செரிமானத்தை மேம்படுத்தும்

ஊற வைக்காத பருப்பை காட்டிலும், ஊற வைத்த பருப்பு செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. மேலும், இரும்பு, துத்தநாகம், கால்சியம் போன்ற சத்துக்களின் ஊறிஞ்சுதலுக்கும் வழிவகுக்கிறது

வாயு தேக்கத்தை தடுக்கும்

பருப்புகளை ஊற வைக்கும் போது அதில் காணப்படும் சிக்கலான சர்க்கரைகள் உடைகிறது. இதன் விளைவாக பருப்பு நுகர்வுக்கு பின் உண்டாகும் வாயுத் தேக்கம், செரிமான அசௌகரிய நிலை போன்றவை தவிர்க்கப்படும்

வயிற்று எரிச்சலை தடுக்கும்

பருப்பு வகைகளில் காணப்படும் லெக்டின்கள் குடலில் எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குறித்த இந்த பருப்புகளை ஊற வைப்பது, லெக்டின்கள் அளவை குறைத்து குடல் எரிச்சல் ஏற்படுவதன் வாய்ப்பை குறைக்கிறது

சமைக்கும் நேரத்தை குறைக்கும்

பருப்பை ஊற வைக்கும் போது அதன் இறுக்கத்தன்மை குறைகிறது.'பருப்பை வேக வைக்கும் போது' குறைந்தளவு நேரம் மட்டுமே பிடிக்கும்

சமைக்கும் நேரம் அதிகம்

ஊற வைக்காத பருப்புகள் சமையலின் போது அதிக தண்ணீரை குடிக்கும்

சுவை மேம்படும்

ஊற வைத்த பருப்புகள் குறைந்தளவு நீரையே குடிக்கும். இதன் மூலம், பருப்பில் செறிவூட்டப்பட்ட சுவையை தக்க வைத்து உணவின் சுவையை மேம்படுத்தலாம்