குழந்தைகளுக்கு பிடித்த ஓட்ஸ் குக்கீஸ் ரெசிபி ட்ரை பண்ணுங்க

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள்: ரோல்டு ஓட்ஸ் - 1 கப், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 கப், உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் , சர்க்கரை - 1 கப், நாட்டு சர்க்கரை - 1 கப்

பால் - 1/2 கப் காய்ச்சி ஆறவைத்தது, கோகோ பவுடர் - 1/4 கப் , பீனட் பட்டர் - 1/2 கப், வெண்ணிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு

செய்முறை : ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி அதில் சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து கொதிக்கவிடவும்

அதன் பின் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும். அடுத்தது பீனட் பட்டர், வெண்ணிலா எசென்ஸ் மட்டும் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

அடுப்பை குறைந்த தீயில் வைத்து ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் கலந்துகொள்ளவும். ஓட்ஸ் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்

ஓட்ஸ் கலவையை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்,அடுத் தது ஒரு ட்ரே எடுத்து அதில் வெண்ணெய் தடவி அதில் பட்டர் பேப்பரை போடவும்

அடுத்தது ஓட்ஸ் கலவையை வட்டமாக தட்டி பட்டர் பேப்பரில் வைத்து 1 மணிநேரம் பேக் செய்தால் சுவையான ஓட்ஸ் குக்கீஸ் தயார்