தேவையான பொருட்கள் : வேர்க்கடலை - 1 கப், பாதாம் - 1 கப், ஆளிவிதை - 1/2 கப், பிஸ்தா - 1/4 கப்



ஓட்ஸ் - 1/2 கப், சூரியகாந்தி விதை - 1/4 கப், பூசணி விதைகள் - 1/4 கப்



தேங்காய்த் தூள் - 1/2 கப், வெல்லம் - 1.5 கப், நெய் 3-4 டீஸ்பூன்



முன்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் தனிதனியாக எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்



பின் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்



மிக்ஸியில் வெல்லத்தை அரைத்து, அதையும் இந்த கலவையில் சேர்க்கவும்



நெய்யையும் சேர்த்து கொண்டு நன்றாக பிசைய வேண்டும்



பின் லட்டு பிடிப்பது போல் பிடித்தால், சத்தான மாவு உருண்டை தயார்



தினமும் ஒரு உருண்டை சாப்பிடால் முடி, சரும ஆரோக்கியம் நன்றாக இருக்கும்