ஒரு கப் கருப்பு உளுந்து, கால் கப் பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, ஏலக்காய் ஆகியவற்றை வறுக்கவும் இவற்றை ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும் முக்கால் கப் வெல்லத்தையும் இதனுடன் சேர்த்து 2 சுற்று சுற்றவும் அதிக நேரம் அரைக்க கூடாது. 10 நொடி அரைத்தால் போதும் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். 3 ஸ்பூன் நெய்யை உருக்கவும் இந்த மாவுடன் நெய்யை சேர்க்கவும். லேசாக மாவை ஆற விடவும் கை பொருக்கும் சூட்டில் இதை உருண்டைகளாக பிடிக்கவும் முந்திரிகளை வறுத்து லட்டின் மீது வைத்து அலங்கரிக்கலாம் அவ்வளவுதான் சுவையான உளுந்து லட்டு தயார்