இந்த உணவுகளை ஊற வைத்து சாப்பிட்டால்தான் முழு ஊட்டச்சத்து கிடைக்கும்! பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளி போன்ற விதைகளை சாப்பிடுவதற்கு முன் இரவில் ஊறவைக்க வேண்டும் பிஸ்தாவை இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிடும் போது முழு ஊட்டச்சத்து கிடைக்கும் பாதம் பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாடு அதிகரிக்கலாம் ஓட்ஸில் ஃபைடிக் அமிலம் நிறைந்துள்ளது ஓட்ஸை ஊற வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள ஊட்டச்சத்து கிடைக்கும் கிட்னி பீன்ஸை வேக வைக்கும் முன் ஊற வைத்து சாப்பிடும் போது அது எளிதாக ஜீரணமாகிவிடும் சுண்டலை ஊற வைக்கும் போது, அது சீக்கிரமாக வெந்துவிடும், சமையலும் சுலபமாகிவிடும் சோயா பீன்களை மென்மையாக்க ஊறவைக்க வேண்டும். இப்படி செய்தால் அது எளிதாக ஜீரணமாகும்