சுவையான வேர்க்கடலை பொடி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 250 கிராம், கடலை பருப்பு - 4 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி , தனியா - 5 மேசைக்கரண்டி சீரகம் - 2 மேசைக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 20 , புளி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, கல் உப்பு முதலில் ஒரு பானில் வேர்க்கடலை சேர்த்து 10 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் அடுத்தது அதே பானில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும் அடுத்தது தனியா, சீரகம், சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன்பின் சிவப்பு மிளகாய், புளி, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நான்கு வறுக்கவும் அடுத்தது அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தூள், கல் உப்பு, சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டில் மாற்றி நன்கு ஆற வைக்கவும் அடுத்தது வேர்க்கடலையும், ஆறவைத்த மசாலாவையும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் அருமையான வேர்க்கடலை பொடி தயார்