சமையலறை வேலையை ஈசியாக்க டிப்ஸ்!

Published by: ABP NADU

தோசைக்கல் முழுவதும் படிகல் உப்பை பரவலாகத் தூவி, ஐந்து நிமிடங்களுக்கு பிறகு உப்பை எடுத்து விட்டு தோசை ஊற்றுங்கள். உடையாமல் வட்டமாக எடுக்க வரும்

உளுந்து வடை செய்யும்போது அரைத்து எடுத்த மாவில் ஒரு பிடி கோதுமை மாவு சேர்த்து பிசைந்து செய்தால் வடை ருசியாக இருக்கும்

காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்

இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் தண்ணீர் ஊற்றி அரைத்தால் மாவு நன்றாக பொங்கிவரும்

கொத்தமல்லித் தழையை வாழை இலையில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஐந்து நாட்கள் வரை பசுமையாக இருக்கும்

அடை, தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்புடன் இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்

கறிவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் 4-5 நாட்களானாலும் வாடாமல் இருக்கும்

அதிரசம் செய்யும் போது, ஈர அரிசிமாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும்