கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 13

Published by: பிரியதர்ஷினி

எலுமிச்சை பழம் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க தேங்காய் எண்ணெயை அதன் மீது தடவி வைக்கலாம்

காரகுழம்பு செய்தால் புளிக்குப் பதிலாக தக்காளி பழங்களை போட்டு வைத்தால் குழம்பு ருசியாகவும் மணமாகவும் இருக்கும்

ஒரே பாத்திரத்தில் கேக் மற்றும் பிஸ்கட் போட்டு மூடி வைத்தால் பிஸ்கட்கள் நமத்து போய்விடும். எனவே அவற்றை தனியாகதான் வைக்க வேண்டும்

சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு சமைக்கும் போது புளி நீரில் வேகவைத்து சாப்பிட்டால் வாயிலும், நாக்கிலும் ஏற்படும் எரிச்சல் வராமல் இருக்கும்

சாம்பாரில் புளிப்பு தன்மை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரையை சேர்த்தால் புளிப்பு தன்மை குறைந்துவிடும்

மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை அப்படியே வைக்காமல் பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது

மிருதுவான சப்பாத்தி வேண்டுமென்றால், தோசை கல்லில் சப்பாத்தியை போட்ட உடன் எண்ணெயை ஊற்றாமல் பாதி வெந்தவுடன் எண்ணெய் சேர்க்க வேண்டும்

கமலாப்பழம் தோலை வீணாக்காமல் தேநீர் தயாரிக்கும் போது அந்த தோலை சிறிதளவு தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணமாக இருக்கும்