கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 9

Published by: பிரியதர்ஷினி

பருப்பு பாயாசம் செய்யும் போது சிறிதளவு ஐவ்வரிசியையும் சேர்த்து செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்

பீன்ஸ் முட்டைகோஸ் கூட்டு செய்யும் போது சீரகம், தேங்காய் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்

ரவா லட்டு செய்யும் போது சிறிதளவு பால் பவுடர் சேர்த்துக் கொண்டால் லட்டு மிகவும் சுவையாக இருக்கும்

தேங்காய் சட்னி செய்யும் போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால், செரிமான பிரச்சினைகள் வராமல் இருக்கும்

ஃப்ரைட் ரைஸ் போன்ற சாத வகைகள் செய்யும் போது சாதம் உடைந்து விடாமல் இருக்க முள் கரண்டியால் கலக்கினால் சாதம் உடையாது

அரிசி உப்புமா அல்லது கோதுமை உப்புமா செய்யும் போது இறுதியில் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்தால் சுவையாக இருக்கும்

வாழைப்பூ நறுக்கும் போது சிறிதளவு நல்லெண்ணெயை கையில் தடவிக்கொண்டால் கறை படாது

டீயின் ருசியை அதிகரிக்க கொதிக்கும் பாலில் டீத்தூளுடன் கிராம்பு, ஆரஞ்சு தோல் சேர்த்தால் டீ நன்றாக இருக்கும்