சுவையான மசாலா பாஸ்தா ரெசிபி

Published by: பிரியதர்ஷினி

தேவையான பொருட்கள் : பென்னே பாஸ்தா - 1 கப், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது , வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது, கேரட் - 1/2 கப் நறுக்கியது

பச்சை பட்டாணி - 1/2 கப், உப்பு - 2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், கொத்தமல்லி, மொஸரெல்லா சீஸ்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பாஸ்தா, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்த பாஸ்தாவை வடிகட்டி ஆறவைக்கவும்

பாஸ்தா செய்வதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்த உடன் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்

அதன் பிறகு, பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்

அடுத்தது, மசாலாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கிளறி மூடி விட்டு, சிறு தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்

5 நிமிடத்திற்கு பிறகு, வேகவைத்த பாஸ்தாவை மசாலாவில் சேர்த்து, பாஸ்தாவில் மசாலா இறங்கும் வரை கிளறிவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலை, சீஸ் தூவி இறக்கினால் சுவையான மசாலா பாஸ்தா ரெடி