இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது பசலைக்கீரை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப் பயன்படுகிறது.
கேரட் மற்றும் பீட்ரூட் இரண்டும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆற்றல் கொண்டது. இதை சூப்பாக்கி குடித்தால் சளித்தொல்லை மட்டுமின்றி மேலும் பலவற்றிற்கு நிவாரண் அளிக்கும்.
சளித்தொல்லைக்கு சிறந்த நிவாரணி மிளகுரசம். துவரம் பருப்பு, மிளகு, புளி, மசாலா கலந்து இதை செய்து கொத்தமல்லி தூவி குடிக்கலாம்.
இனிப்பு சுவையுடன் இந்த சூப்பை தயார் செய்து குடிக்கலாம். சோளம் சளியில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
தக்காளி பல ஆரோக்கியம் தரும் ஆற்றல் கொண்டது. தக்காளி சூப் பலவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
காலிஃப்ளவர் ஆரோக்கியமான காய்கறி. இதை நறுக்கி சூப் செய்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
வைட்டமின் சத்துக்களும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்த கேரட், இஞ்சியை சேர்த்து இஞ்சி கேரட் சூப் குடிக்கலாம்.
நாட்டுக்கோழி மிகவும் ஆரோக்கியம் தருவது. மசாலா பொருட்கள் கலந்து நாட்டுக்கோழி ரசம் தயார் செய்து பருகினால் சளித்தொல்லைக்கு தீர்வு கிட்டும்.
காய்கறிகளை நறுக்கி, மசாலா பொருட்கள் கலந்து இந்த சூப் தயாரித்து பருகலாம்.