முருங்கைப் பொடியை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் செயல்பாடு சீரடைகிறது. சர்க்கரை அளவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முருங்கைப் பொடியில் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி நீர்வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் ஆகியவை இருப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கைப் பொடியில் உள்ள பீட்டா சிட்டோஸ்டெரால் கொழுப்பை குறைத்து ரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வயிறு வலியை குணமாக்கும் ஆற்றல் முருங்கைப் பொடிக்கு உள்ளது. செரிமானத்தை சீராக்குகிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் நச்சுத்தன்மையை நீக்குகிறது. ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. கல்லீரல் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
முருங்கைப் பொடியில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் காரணமாக உடலில் உள்ள ஆற்றல் அதிகரிக்கிறது.
இதில் உள்ள வைட்டமின்கள், நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்சிஜனேற்றிகளை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.